BREAKING NEWS

நாட்டின் வளர்ச்சியே எங்கள் குறிக்கோள்

நாடு வளர்ச்சி பெறுவதில்தான் எங்கள் கவனமும், குறிக்கோளும் இருக்கும் என்று அசாம் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக அசாம் மாநிலத்திற்கு வருகை புரிந்தார். போடோ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் இங்கு வந்துள்ள அவர், கோக்ரஜ்ஹரில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது :
வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைக்கு இடமில்லை. இதனை நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இங்கு அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
போடோ அமைப்பினருடன் போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு பதிய பாதை பிறந்துள்ளது. அமைதி ஏற்பட வழி கிடைத்துள்ளது. போடோ ஒப்பந்தம் மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி. அனைவருக்கும் கிடைத்த வெற்றி. நிரந்தர அமைதியை ஏற்படுத்தும். வடகிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும். அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னேறி செல்வோம். உள்ளூர் மக்களை மனதில் வைத்து அசாம் அரசு திட்டங்களை கொண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலத்தவரை வெளியாட்கள் என நாங்கள் கருதியது இல்லை.
இந்த பகுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிமைப்படுத்தியது. வட கிழக்கு மாநிலங்களில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் யாரும் முதலீடு செய்யவில்லை. ஆயுதப்படை சிறப்பு சட்டத்தில் இருந்து பல பகுதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை ஊக்கப்படுத்தி வருகிறோம். செயல்பாட்டில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. வெற்று வாக்குறுதி அளிப்பதை நான் நம்பவில்லை. உங்களது பிரச்னையை தீர்க்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது.
சில ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 3 ஆயிரம் கி.மீ.,தூரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. திட்டங்களை விரைந்து முடிக்க கவனம் செலுத்தி வருகிறோம். தேசத்தின் வளர்ச்சிக்கு அசாம் அளித்த பங்களிப்பை யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது.
நாடு வளர்ச்சி பெறுவதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும். வளர்ச்சி பாதையை தேர்வு செய்த வடகிழக்கு பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதில் இருந்து மக்கள் விலகி விடக்கூடாது என கேட்டு கொள்கிறேன். அண்டை நாடுகளில் வன்முறை காரணமாக ஏராளமானோர் வடகிழக்கு மாநிலங்களில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். இங்கு, உரிய மரியாதை மற்றும் பெருமையுடன் வசிக்க செய்வதற்கான புதிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடிபேசினார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *