BREAKING NEWS

‘கர்ணன்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு

தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு ‘‘கர்ணன்’’ என தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.
இந்த தலைப்பில் சிவாஜி கணேசன் ஏற்கனவே நடித்து மிகபெரிய வெற்றி பெற்ற படம் இருக்கிறது. எனவே இப்படத்துக்கும் அதே தலைப்பை வைக்க சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், தாணுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தங்கள் தயாரிப்பில் கர்ணன் என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாக படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் சிவாஜியின் மகாபாரதக் கர்ணன் திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம். பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது சிவாஜியின் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை, ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *