இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6 அப்டேட் வழங்கப்பட்டது.
புதிய விலை குறைப்பின் படி ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. வேரியண்ட் அதன் 4ஜி.பி. வேரியண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் முன்னணி மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் ஒப்போ நிறுவனம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
ஒப்போ கே1 (6 ஜி.பி. ரேம்) மாடல் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் ரூ. 13,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.16,990 விலையில் வெளியிடப்பட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கே1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள கே1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்பி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *