BREAKING NEWS

விஜய் சேதுபதி பிறந்த நாளில் 202 பேர் உடல் உறுப்பு தானம்

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியை சேர்ந்த அவரது ரசிகர்கள் 202 பேர் உடல் உறுப்பு தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி திருச்சி விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் நடந்தது. அந்த 202 ரசிகர்களும் தங்களது குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இதுவரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை 1338. என்றும் இதில் ஒரே நேரத்தில் 185 பேர் மட்டுமே இதுவரை உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் என்பதும் வரலாறு. அதை திருச்சி விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து முறியடித்து இருக்கிறார்கள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *