BREAKING NEWS

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி அன்று வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து ஏற்றம், இறக்கம் இருக்கும்.

இந்த மாதத்துக்கான கியாஸ் விலை பற்றி 1-ந்தேதியில் இருந்து அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் வீட்டு உபயோகத்திற்கான மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் (14 கிலோ) விலை ரூ.147 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் (ஜனவரி) கியாஸ் சிலிண்டர் விலை ரூ.734 ஆக இருந்தது. தற்போது ரூ.147 உயர்ந்து ரூ.881-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.290.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்(19 கிலோ) கடந்த 1-ந்தேதி ரூ.154 உயர்த்தப்பட்டு ரூ.1589-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *