BREAKING NEWS

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலணை இன்று நடைபெற உள்ளது. மனுக்களை திரும்ப பெற நாளைமறுநாள் கடைசி நாள் ஆகும்.
உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணி கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி கூட்டணி ஒது்ககீட்டை முடித்தனர். இதேபோல, தி.மு.க. தரப்பிலும் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, வி.சி.க. ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, கூட்டணி ஒதுக்கீடு முடிக்கப்பட்டது.
இதையடுத்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. தரப்பில் மாவட்ட வாரியாக தேர்தல் குழுக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நியமித்துள்ளனர். இதேபோல, தி.மு.க. தரப்பிலும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களும், உள்ளாட்சித் தேர்தலுக்கான சட்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று பரிசீலணை
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், தேர்தல் பொறுப்பாளர்களுடனும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் இதுவரை 27 மாவட்டங்களிலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலணை இன்று நடைபெற உள்ளது. இந்த பரிசீலணையின்போது தகுதியில்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். இந்த உள்ளாட்சித் தேர்தல் முதல் வேட்பாளர்கள் தங்களுடைய சொத்துமதிப்பையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசிநாள் நாளை மறுநாள் ஆகும். இதையடுத்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் மாலையே வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இரு கட்டங்களாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ந் தேதி நடைபெற உள்ளது.
சூடுபிடிக்கும் பிரசாரம்
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றதையடுத்து, முன்னணி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் முன்னணி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அதிகாரிகளும், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *