BREAKING NEWS

198 பந்துகள் வீசியும் விக்கெட் இல்லை

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 198 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத மோசமான சாதனையை சுழற்பந்து வீச்சாளர்கள் படைத்துள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 10 விக்கெட்டுகள் விழுந்தன.
இந்திய அணியில் விழுந்த 8 விக்கெட்டுகளில் 7 பேர் வேகப்பந்துக்கு ‘அவுட்’ ஆனார்கள். ஒரு வீரர் ‘ரன் அவுட்’ ஆனார் வெஸ்ட் இண்டீசுக்கு விழுந்த 2 விக்கெட்டும் வேகப்பந்து வீரர்கள் கைப்பற்றியது.198 பந்துகள் வீசியும் சுழற்பந்து வீரர்கள் யாராலும் விக்கெட் எடுக்கப்படவில்லை. இந்திய சுழற்பந்து வீரர்கள் 126 பந்தும், வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீரர்கள் 72 பந்தும் வீசினார்கள்.
சர்வதேச போட்டியில் இது 4-வது நிகழ்வாகும்.வங்காளதேசம் ஜிம்பாப்வே (2001) அணிகள் மோதிய போட்டியில் 228 பந்துகள் வீசியும் சுழற்பந்து வீரர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாததால் முதல் நிலையில் இருக்கிறது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *