BREAKING NEWS

39 உயர்பயிற்சிகளை டிராக் செய்யும் புதிய சாம்சங் கேலக்ஸி வாட்ச்

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4ஜி மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவற்றில் 4ஜி எல்.டி.இ. வசதி வழங்கப்படவில்லை. தற்சமயம் சாம்சங் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலின் 4ஜி வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், 1.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 360X360 பிக்சல், டூயல் கோர் பிராசஸர், 1.5 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 39 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இ சிம் மூலம் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் கொண்டே வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இ சிம் சேவையை தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி (44 எம்.எம்.) மாடலில் 44 எம்.எம். ஸ்டீல் டையல் சில்வர், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.35,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *