BREAKING NEWS

சுசீந்திரம் கோவிலில் காதலனுடன் நயன்தாரா

நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்தின் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நயன்தாரா கன்னியாகுமரி சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அவருடன் அவரது காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நடிகை நயன்தாரா குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்தநிலையில், ஞாயிறு இரவு 7.30 மணியளவில் இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சென்ற நேரத்தில் ஸ்ரீபலி பூஜைக்காக மூலஸ்தான நடை மூடப்பட்டது. இதையடுத்து நயன்தாராவும், அவரது காதலனும் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து நடை திறந்த பின்பு சாமி தரிசனம் செய்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *