BREAKING NEWS

தமிழக முதல்வரின் கடிதத்தை, நிர்மலா சீதாராமனிடம் கொடுத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

4வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2029.22 கோடி செயலாக்க மானியத்தொகை மற்றும் ரூ.4,345.47 கோடி அடிப்படை மானியத் தொகையை விடுவிக்க கோரிய தமிழக முதலமைச்சரின் கடிதத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினர்
இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள அக்கடிதத்தில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், இந்த உள்ளாட்சி அமைப்புகள் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்தத் தொகை தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
14வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, 2வது தவணையாக அடிப்படை மானியத்தொகையை 2018ம் ஆண்டுக்கு ரூ.1608.03 கோடியை வழங்கியிருப்பதற்காக, தமிழக மக்களின் சார்பில் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் கமிஷன், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 27 மாவட்டங்களிலும் 27.12.2019 மற்றும் 30.12.2019 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடித்து, தேர்தல் பணிகளை 11.1.2020 அன்று வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
தவிர எஞ்சியிருக்கும் 9 மாவட்டங்களில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்துவற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது என்பதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *