BREAKING NEWS

விமர்சனம்: மாய நதி

படிக்கிற காலத்தில் படிப்பை தவிர வேறு எதிலும் மாணவ மாணவிகளின் கவனம் சிதறகூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக தந்திருக்கும் படம் இது.
கதாநாயகன் அபி சரவணன் ஒரு ஆட்டோ டிரைவர். பல காதல் தோல்விகளை சந்தித்தவர் அவருக்கும், டாக்டருக்கு படிக்க துடிக்கும் மாணவி வெண்பா.வுக்கும் காதல் மலருகிறது.
இந்த காதலாவது ஜெயிக்க வேண்டும் என்பது அபி சரவனனின் ஆசை. அதனால் திருமணத்துக்கு அவசரப்படுகிறார். மாணவி வெண்பாவுக்கோ டாக்டர் ஆக வேண்டும் என்பது கனவு.. காதல் வென்றதா? அவளின் கனவு வென்றதா என்பது கதை. அபிசரவணன் கொடுத்த வேடத்தை நிறைவாக செய்து இருக்கிறார். தனது காதலுக்காக வெண்பாவின் படிப்போடு விளையாடுவது விறுவிறுப்பான காட்சி.
புது முகம் வெண்பாவுக்கு அருமையான வேடம். படிப்பா? காதலா என தடுமாறும் இடத்தில் எல்லாம் கைதட்டல் பெறுகிறார். அப்பாவின் பாசத்தில் உருகி தவிக்கும் போது நல்லதொரு மகளாக வாழ்ந்திருக்கிறார். தந்தையாக ஆடுகளம் நரேன். அனுபவ நடிப்பு கச்சிதம்.
படத்தை இயக்கி இருப்பவர் டாக்டர் அசோக் தியாகராஜன்,. அறிமுக டைரக்டர் மாதிரி தெரியவில்லை. படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கும் விதத்தில் பாராட்டுக்கு உரியவரே. ஆனால் கதையை திருப்பம் எதுவும் இல்லாமல் கொடுத்து இருப்பது சற்று நெளியவைக்கிறது;
இளையராஜாவின் மகள்பவதாரிணியின் இசையில் பாடல்கள் மனதில் ரீங்காரம் இடுகிறது..குளுமையான ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார், னிவாசன்.
மாய நதி –மனதை தொடும் நதியே..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *