BREAKING NEWS

மஞ்சுவாரியரின் கனவு நிறைவேறியது

மலையாளத்தில் 1995–ல் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். மஞ்சுவாரியர். 50–க்கும் அதிகமான படங்களில் நடித்தார் புகழுடன் இருக்கும் போதே பிரபல மலையாள நடிகரான திலீப்பை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இவரும் திலீப்பும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் 15 வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
மஞ்சுவாரியரின் ‘‘ஹவ் ஓல்டு ஆர் யூ ‘‘ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் மீண்டும் முன்னணி நாயகி இடத்தை பிடித்தார். அந்த படம் தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே‘ என்ற பெயரில் வெளியானது. தனுஷ் ஜோடியாக ‘அசுரன் ‘படம் மூலம் தமிழிலும் மஞ்சுவாரியார் அறிமுகமானார்.
கடந்த 19 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் அத்தனை கதாநாயகர்களுடன் நடித்துள்ள மஞ்சு வாரியார் மம்முட்டியுடன் மட்டும் ஜோடியாக நடிக்க வில்லை.
திலீப்புடன் உள்ள நெருக்கம் காரணமாக மஞ்சுவாரியர் தனது படங்களில் நடிப்பதை மம்முட்டியும் விரும்பவில்லை. தற்போது மஞ்சு வாரியரின் கனவு நிறைவேறி இருக்கிறது.முதல் முறையாக மம்முட்டி படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க ஒப்பந்ச்தம் ஆகி இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *