விமர்சனம்: மாமாங்கம்

கேரள நாட்டில் நடந்த வரலாற்று சம்பவத்தின் கதை
வள்ளுவ நாட்டை சேர்ந்தவர்களின் உரிமையையும், ஆட்சியையும் சாமோத்ரி இனத்தை சேர்ந்தவர்கள் பறித்து நாட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். தனி கூட்டமாக வாழும் அவர்கள் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆட்சியை மீட்டெடுக்க 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ‘மாமாங்கம்’’ விழாவில் மோதி வெற்றி பெற நினைக்கிறார்கள். இதற்காக சாமோத்ரி இனத்து ஆண் பிள்ளைகளை ‘தற்கொலைப் படை‘யாக வளர்த்து மோதலுக்கு அனுப்புகிறார்கள். இவர்களுக்கு ‘சாவேரு‘ என பெயர்.
ஒருமுறை மம்முட்டி ‘சாவேரு‘ வாக சென்று சாமோத்ரி வீரர்களுடன் மோதி தலைமையை சாகடிக்கும் சமயத்தில் தோல்வியை தழுவுகிறார்..அதனால் சொந்தநாடு திரும்பாமல் தலைமறைவாகிறார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘சாவேரு‘வாக வீரர்களான உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் எதிரிகளை வென்று உரிமையைமீட்டார்களா? மம்முட்டி என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.
படம் எடுத்த எடுப்பிலேயே மம்முட்டி போரிடும் போர்கள காட்சியுடன் தொடங்குகிறது. பிரமாண்டமான அக்காட்சிகள் ரசிகர்களை கட்டி போட்டு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் போரில் தோல்வியுற்று அவர் மாயமான உடன் படமும் சுவை குன்றி விடுகிறது. அது மீண்டும் மம்முட்டியை போல் ‘சாவேரு‘வாக வரும் உன்னி முகுந்தனும் மாஸ்டர் அச்சுதனும் எதிரி நாட்டுக்குள் நுழைந்த பிறகு தான் நிமிர்ந்து நிற்கிறது. அங்கு அவர்களுக்கு ஆதரவு அளிப்பவராக மீண்டும் மம்முட்டி வந்த போதிலும் பழைய கம்பீரம் இல்லை.. திருநங்கை ஆக நடக்க விட்டு இருக்கிறார்கள்.
உன்னி முகுந்தன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். போர் கள காட்சியில் மாஸ்டர் அச்சுதன் விளையாடி இருக்கிறான். அத்தனை வீரர்களையும் கடந்து எதிரியின் தலையை கொய்யபோகையில் வாள் குத்தில் பலியாகி வீரமரணம் எய்யும் போது கண் கலங்குகிறது.
சாவேரு வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பிடிபடும் கூட்டத்தை சேர்ந்தவராக இனியா. கச்சிதமான நடிப்பு. மற்றொரு நாயகியாக அனு சித்தாரா. அழகு பதுமை.மன்னர்களின் ஆட்சி காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா.‘‘மாமாங்கம்’ .இந்த விழாவை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்மகுமார்.

‘மாமாங்கம்’‘ மனதை தொடும் படைப்பே.
One thought on “விமர்சனம்: மாமாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *