BREAKING NEWS

இந்திய சந்தையில் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. அறிமுகம்

எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்.ஜி. குளோஸ்டர் என அழைக்கப்படும் புதிய எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் பிரம்மாண்ட மாடலாக காட்சியளிக்கிறது.

காட்சிக்கு வைக்கப்பட்ட எம்.ஜி. குளோஸ்டர் கார் எம்.ஜி. நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எம்.ஜி. குளோஸ்டர் விலை ரூ. 35 லட்சத்தில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *