BREAKING NEWS

நயன்தாராவுடன் காதல் முறிவா?

நடிகை நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் அடிக்கடி வெளி நாடு பறப்பதும், புத்தாண்டு , பொங்கல் போன்ற திருவிழா காலங்களில் இருவரும் ஒன்றாக இருப்பது போல் போட்டோ எடுத்து பதிவிடுவதும் வழக்கம். ஆனால் சமீபத்தில் சென்னையில் நடந்த விருது நிகழ்ச்சிக்கு நயன்தாரா தனியாகவே வந்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் விக்னேஷ் சிவன் எங்கே என முனுமுனுக்கத் தொடங்கினர்.
மேலும் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட படங்களிலிலும் இவரைக் காணவில்லை. ஆகவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதை கேள்விபட்ட விக்னேஷ் சிவன் பதறிப்போனார். ‘‘எங்கள் காதல் முறியவில்லை’‘ என சொல்லும் விதத்தில் அவர் உடனடியாக நயன்தாராவுடன் ஒரு செல்ஃபி எடுத்து பதிவிட்டார் அதில் நயன்தாரா புடவையில் உள்ளார். சிகப்பு நிற டி ஷர்ட்டில் விக்னேஷ் உள்ளார். இந்தப் படம் அவர்களைப் பற்றி பரவிய பல ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *