BREAKING NEWS

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை மேலும் 21 ஆண்டுகள் நீடிப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் மீதான குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமாகும். மாநில அரசுக்கு சொந்தமான இந்த மைதானத்தின் பராமரிப்பு, நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) குத்தகை மேலும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குத்தகை காலம் அண்மையில் முடிந்து விட்டது.
டிஎன்சிஏ வின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளராக ஆர்.எஸ்.ராமசாமி ஆகியோர் பதவியேற்ற நிலையில் குத்தகை காலத்தை நீட்டிக்கவும், திறக்கப்படாமல் உள்ள மூன்று காலரிகள் பிரச்னைக்கு தீர்வு காணவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தலைவர் ரூபா குருநாத், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் பின்னடைவாக அமைந்துள்ள ஐ, ஜே மற்றும் கே உள்ளிட்ட மூன்று காலரிகள் திறக்கும் பணியும் இதன் மூலம் விரைவில் மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *