கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்? இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 21 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்யில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 11 என்ற களத்தில் சம நிலையில் உள்ளது.இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (22-ந் தேதி) ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகியது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கோலி, இரு ஆட்டங்களிலும் சோபிக்கவில்லை. முதல் ஆட்டத்தில் 4 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் பீல்டிங் சுமாராக இருந்தது. கேட்சுகளை தவறவிட்டதால் விமர்சனங்களுக்கு உள்ளானார்கள். இதனால் பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியம். பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் இருப்பதால் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இன்டீஸ் அணியில் இவின் லீவிஸ், ஷாய் ஷோய்ப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களின் அதிரடியை பொறுத்து ரன் குவிப்பு இருக்கும். பந்து வீச்சில் காட்ரெல், ஹோல்டர், ஜோசப், ரோஸ்டர் சேஸ் ஆகியோர் உள்ளனர்.
2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி 387 ரன் குவித்தனர். இதனால் அந்த அணி, பந்து வீச்சில் முன்னேற்றம் காண முயற்சிக்கும். அதேபோல் தொடரை வெல்லவும் கடுமையாக போராடும்.
இரு அணிகளும் இன்று மோதுவது 133-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 132 போட்டியில் இந்தியா 63ல், வெஸ்ட் இண்டீஸ் 63ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டியில் முடிவில்லை.இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *