BREAKING NEWS

கவர்னர் கிரண்பேடியிடம் குஷ்பு கேள்வி

பாண்டிச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்து வருபவர் கிரண்பேடி.
இந்நிலையில்,கவர்னர் கிரண்பேடி தனது இணைய பக்கத்தில்,‘‘ சூரியனில் இருந்து வரும் சத்தம்தான் ‘‘ஓம்’’ என்று ஒலிக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.
இது கடும் விமர்சனங் களை சந்தித்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, தனது இணைய பக்கத்தில் அதுகுறித்து கிரண்பேடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். ‘‘மேடம், நான் உங்களிடம் மரியாதையுடன் ஒரு சந்தேகத்தை கேட்க விரும்புகிறேன். அனைத்து தலைவர்களும் பாஜகவில் சேருவதற்கு முன்பாக தங்களது மூளையை கழற்றி பாதுகாப்பாக வைத்து விட்டுத்தான் கட்சியில் சேருவீர்களா?‘‘ என்று பதிவிட்டுள்ளார்.
கவர்னரை பார்த்து குஷ்பு இப்படி கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *