BREAKING NEWS

ரஜினி படத்தில் குஷ்பு- மீனா

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் காமெடி நடிகர் சூரி இணைந்திருப்பதாக கூறினார்கள். இப்போது இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், நடிகை குஷ்புவும், நடிகை மீனாவும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பை படகுழு இப்போது அறிவித்து இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *