BREAKING NEWS

ரஜினிகாந்துக்கு எதிராக குஷ்பு

ரஜினிகாந்த் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடிக்கிறார்கள்.
இதில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. ஆனால் மீனாவுக்கும் குஷ்புவுக்கு என்ன வேடம் என தெரியாமல் இருந்து வந்தது. இப்போது அந்த விவரம் தெரியவந்துள்ளது.
, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார்.
குஷ்பு நெகடீவ் ரோலில் அதாவது வில்லியாக நடிப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. அதாவது ‘படையப்பா‘ படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்தது போன்று ஒரு அதிரடி வில்லி வேடம் என்று கூறப்படுகிறது. .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *