BREAKING NEWS

ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்

நடிகர் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
குடும்ப கதையாக உருவாகி வரும் இப்படத்தில் நடிக்க குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள், இதில் குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
ஆனால் யாரும் இதை உறுதிப்படுத்தவில்லை
இந்நிலையில்இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை குஷ்பு ஐதாராபாத் சென்று இருக்கிறார். இதுபற்றி அவர் தனது டிவிட்டரில் ‘‘நான் ஐதராபாத் வந்துவிட்டேன். நாளை முதல், தலைவர் 168 படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. அதே நேரம் உற்சாகமாகவும் இருக்கிறது.
மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பர்களே‘‘ என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக இப்போது தகவல் வெளீயாகி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *