BREAKING NEWS

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி இடமாற்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய டெல்லி கோர்ட் கூடுதல் நீதிபதி சதிஷ் குமார் அரோரா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு டெல்லி பாட்டிலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 7 ம் தேதியன்று  குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட  டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கு முன் சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட பல கோர்ட்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இவ்வழக்கில் நீதிபதி சதிஷ்குமார் அரோரா தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனை வழக்கியது. இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி அரோராவுக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் கூடுதல் நீதிபதியாக உள்ள நீதிபதி அரோரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஓராண்டிற்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் பதிவாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அடிப்படையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *