படத்துக்காக மொட்டை அடிக்கிறார், ஜெயம்ரவி

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயராம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடிக்கிறார்கள். 1 வருடத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் எல்லோரும் தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்கிறார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *