BREAKING NEWS

2வது நாளாக ஐ.டி. ரெய்டு: பைனான்சியர் வீட்டில் ரூ.77 கோடி பறிமுதல்

வருமான வரித்துறை சோதனையில் சினிமா பைனான்சியர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சினிமா தயாரிப்பு, வினியோகம், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் அளிப்பது, கால்சென்டர் உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறையினர் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 38 இடங்களில் சோதனை நடத்தினர்.

மேலும், வில்லிவாக்கம், தியாகராய நகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ். கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். அலுவலகம் ஆகிய இடங்களிலும், பிகில் உள்பட பிரபல திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியனின் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள வீடு மற்றும் அவருடைய மதுரை வீடு உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை, மதுரை வீட்டில் என மொத்தம் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *