BREAKING NEWS

பிரான்சில் பரவும் இன்ஃபுளுவென்சா வைரஸ்… இதுவரை 26 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் இந்த காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கடுமையான சுவாசக் கோளாறை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் காய்ச்சலினால், பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் முதல் 311 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 49 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஜெர்மனியை ஒட்டி அமைந்துள்ள செக் குடியரசு நாட்டிலும் இந்த வைரஸ் நோயினால் 12 பேர் பலியாகினர். சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்ஃபுளுவென்சா வைரஸ் நோய் தொற்றினால் பிரான்சில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘இந்த ஆண்டின் (2020) ஐந்தாவது வாரத்தில், அனைத்து பெருநகரங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. காய்ச்சல் காரணமாக 810 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அனைத்து பிராந்தியங்களும் தொற்றுநோய் அபாயத்தில் உள்ளன.

இந்த வார அறிக்கையின் படி, இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 15 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள், 15-64 வயதுடையவர்களில் 12 பேர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 பேரும் அடங்குவர்’ என பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சமயத்தில், இன்ஃப்ளுவென்சா தொற்றுநோய்  ஐரோப்பாவில் பரவி வருவது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *