BREAKING NEWS

கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்கும் இந்திய விஞ்ஞானி!

ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் இறுதி நிலையை நெருங்கியுள்ளது.

ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரானா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர்ஓ புதிய கொரோனா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கு இது முக்கியம் என்ற நிலையில், பேராசிரியர் எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.

பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் உயர்கல்வி பயின்ற எஸ்.எஸ்.வாசன், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வாசன் தலைமையிலான குழு, வைரஸ் அதிகரிக்கும் போது ஏற்படும் வீரியத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கண்டுபிடிப்பிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் அத்தியாவசியமான இந்த மருந்தை சோதிக்கும் ஆய்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *