BREAKING NEWS

முதன் முறையாக வீட்டில் இசை அமைத்த இளையராஜா

தனது 45 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் முதன்முறையாக தனது சொந்த வீட்டிலேயே இளையராஜா இசையமைத்துள்ளார். ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக 1976-ஆம் ஆண்டு தனது இசைப்பயணத்தை இளையராஜா துவங்கினார். முதலில் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்துவந்த அவர் பின்னர் பிரசாத் ஸ்டுடியோவைத் தனது இசைக்கூடமாகப் பயன்படுத்தி வந்தார்.20 ஆண்டுக்கும் அதிகமாக அங்கேயே தங்கி இருந்து இசை அமைத்து வந்தார்.
சமீபத்தில் அவருக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிறுவனத்திற்கும், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தனது ஸ்டூடியோவில் இசை அமைக்க பிரசாத் ஸ்டூடியோ ஒத்துழைப்பு வழங்கவில்லை. இளையராஜாவும் வெளியேறாமல் அடம் பிடித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக இளையராஜாவுக்கு ஆதரவாக டைரக்டர் பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டூடியோ முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆனாலும் பிரசாத் ஸ்டூடியோ அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இளையராஜா தனது அடுத்த படத்துக்கான இசையை தனது வீட்டிலேயே வைத்து அமைத்து கொடுத்தார்.தனது இசை உலக வாழ்க்கையில் முதன் முறையாகத் தனது வீட்டிலேயே அவர் இசையமைத்தது இதுவே முதல் தடவை ஆகும்.
அந்த படத்தின்பெயர் ‘‘தமிழரசன்‘. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படம் இது. எஸ்.என்.எச் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கி இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *