முன்னாள் கணவருடன் நடிக்க மாட்டேன்

மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழும் மஞ்சு வாரியார் ‘‘அசுரன்‘‘ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே . இவரும் நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன் பிறகு திலீப் நடிகை காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திலீப் சமீபத்தில் அளித்த பேட்டியில் “என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன்” என்றார்.
இதற்கு மஞ்சு வாரியார் இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம். நிஜத்தில் அது நடக்கவே நடக்காது. திலீப்புடன் இணைந்து நான் நடிக்க மாட்டேன் ‘‘என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *