BREAKING NEWS

தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன்

டைரக்டர் மணிரத்னம் இயக்கிய ‘‘ காற்று வெளியிடை‘‘ படத்தில் நடித்தவர் அதிதி ராவ். மீண்டும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சைக்கோ‘‘ படத்திலும் நடித்து இருக்கிறார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ‘‘துக்ளக் தர்பார் ‘‘என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஜோடியாக அதிதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2 வருடம் ஆகியும் அப்படம் அறிவிப்போடு நிற்கிறது.
இதுபற்றிஅதிதிராவ்விடம் நிருபர்கள் கேட்டனர்.அப்போது அவர் கூறியதாவது:- ‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது.‘‘ இவ்வாறு அதிதி ராவ் கூறி னார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *