BREAKING NEWS

சேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது

இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றாலே உலகம் முழுவதும் ஒருவித எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். போட்டியில் மட்டுமல்லாமல், இருநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பேச்சும் காரசாரமாக தான் இருக்கும்.
இதனால், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான வர்த்தகமும் உலக கோப்பைக்கு இணையாக இருக்கும். அண்டை நாடாக இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்கள் சிலர் அவ்வப்போது இந்திய அணியை பற்றியும் பெருமையாகவும், ஆதரவாகவும் புகழ்ந்து வந்தனர்.
பாதுகாப்பு இல்லாமை மற்றும் பயங்கரவாதத்தை கைவிடாததால், இந்திய அணி, பாகிஸ்தான் உடனான நேரடி போட்டிகளை தொடர்ந்து தவிர்த்து வருகிறது.
இதனால், பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தியில் இருந்தனர். இருந்தாலும், இந்தியாவுடனான போட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக சில முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில், சோயப் அக்தரருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது இது குறித்து அக்தர் கிண்டலாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:- எனது நண்பர் சேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. ஒரு சாதாரண பையனான நான், சீரியஸாக இல்லாமல் தான் பேசினேன் என்பது சேவாக்கிற்கு தெரியும். ஆனால், அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார்.
ஒருவரின் செல்வம் அல்லாவால் தான் கிடைக்கிறது; இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட, (சேவாக் தலையில் முடி குறைவு) என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அக்தர் கூறினார். .

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *