BREAKING NEWS

ரஜினியின் மகளாக நடித்த அனுபவம் எப்படி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம்‘‘தர்பார்.‘‘ இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.
‘‘ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி?‘‘ என்று அவரிடம் கேட்ட போது நிவேதா தாமஸ் கூறியதாவது:-
ஏற்கனவே கமல் சாருடன் ‘‘பாபநாசம்‘‘ படத்தில் கமல் சாரின் மகளாக நடித்து இருந்தேன். அதே போல் ‘‘ஜில்லா‘‘ படத்தில் மோகன்லால் சாரின் மகளாக நடித்து இருந்தேன். இப்போது ரஜினி சார் மகளாக ‘தர்பார்‘படத்தில் நடித்து இருக்கிறேன்.மூன்று சூப்பர் ஸ்டார்களுக்கு மகளாக நடிக்கும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? அது எனக்கு கிடைத்து இருக்கிறது என்றால் நான் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலி? கடவுளுக்கு நன்றி.
தர்பார் படத்தில் 40 நாட்கள் ரஜினி சாருடன் மும்பை சென்று நடித்து இருக்கிறேன். முதல் நாள் அவருடன் நடிக்கும் போது அச்சத்துடனும் படபடப்புடனும் இருந்தேன். ஆனால் ரஜினிசார் எனக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். முதல் காட்சியே ஒரே டேக்கில் ஓ கே ஆன போது ‘‘அட .. நல்ல நடிக்கிறயே..’‘ என ரஜினி சார் பாராட்டினார் எனக்கு அது போதும்.. அதனால் படத்தில் நடிக்கும் போது அவரை நான் நடிகராகவே பார்க்கவில்லை.மகள் மீது அன்பும் பாசமும் கொண்ட ஒரு நல்ல மனிதராகவே கண்டேன். தந்தை மகள் பாசமே மேலோங்கி இருந்தது.
ஒரு தடவை மும்பை கடற்கரையில் நானும் அவரும் பேசிக்கொண்டே நடந்து வருவது போன்ற ஒரு காட்சியை எடுத்தார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரஜினி சார் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்? அந்த காட்சியில் அவ்வழு பெரிய கூட்டத்தில் ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சர்வ சாதாரணமாக என்னோடு நடந்து வந்தார் என்றால் பாருங்கள். காமிராவை மறைத்து வைத்து இக்காட்சியை ய்தார்த்தமாக எடுத்தார்கள். மறக்க முடியாத சம்பவம் இது. ‘தர்பார்‘ படப்பிடிப்பின்போதே நான் ரஜினி சாரின் திறமையைப்பார்த்து வியந்திருந்தாலும், டிரெய்லரைப்பார்த்து அதைவிட பன்மடங்கு வியப் படைந்தேன். அப்படியொரு ஆச்சர்யப்படுத்தும் நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, ஸ்டார் நடிகர்களான விஜய், அஜீத், மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், நானி என அனைவரும் ரசிக்கும் ஒரு மாபெரும் ஹீரோவாக இருக்கிறார் ரஜினி. அந்த வகையில் நட்சத்திரங்களெல்லாம் விரும்பும் ஒரே நட்சத்திரம் ரஜினிதான் இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *