இந்தியாவில் புதிய ஹானர் இயர்போன் அறிமுகம்

ஹானர் பிராண்டு புதிய இன்இயர் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் புதிய இன்இயர் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் ஹானர் ஏ.எம்.115 என அழைக்கப்படுகிறது.
ஹானர் ஏ.எம்.115 இயர்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இது சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளதால் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. ஏ.எம்.115 இயர்போனில் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது
இத்துடன் அழைப்புகளை ஏற்பது, கண்ட்ரோல் பிளேபேக் போன்ற அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இயர்போன் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே விற்பனைக்கு வழங்கப்படுவதாக ஹானர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் ஏ.எம்.115 இயர்போனின் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெறுகிறது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *