விமர்சனம் – ஹீரோ

‘‘புதுசு புதுசா விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துங்கள். அப்போது தான் நாடு முன்னேறும்‘‘ என்பது தான் கதையின் மைய கரு. நல்ல கரு தான் ஆனால் அதை குழப்பத்துக்கு மேல் குழப்பமாக எடுத்து வைத்து இருக்கிறார்கள்.
கதாநாயகன் போலி சர்டிபிகேட் அச்சடித்து கொடுக்கும் ‘பிராடு‘ பேர்வழி.
அதோடு கமிஷன் அடிப்படையில் கல்லூரியில் இடம் வாங்கி கொடுக்கும் வேலையும் செய்கிறார். அவரது தங்கை மதிக்கு கல்லூரியில் சீட் கேட்க பணம் கொடுத்தால் தான் சீட் என உதறி விடுகிறார்கள். ஏழை மாணவியான மதி ஒரு விஞ்ஞான மாணவி. அவள் உப்பு தண்ணீரில் ஒடும் இந்திரத்தை கண்டுபிடிக்க -,வியந்து போன கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு சீட் கொடுப்பதோடு அவளது கண்டுபிடிப்பு பார்முலாவையும் வாங்கி வைத்துகொள்கிறது.
பிறகு அது எங்களது கண்டு பிடிப்பு என கூறுவதோடு மாணவி மீது திருட்டு பட்டத்தை கிளப்பி விடுகிறது. மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் ஆவேசமடையும் கதாநாயகன் ‘முகமூடி‘ அணிந்து எதிரிகளை பழிவாங்குகிறான் என்பதே கதை
கதாநாயகனாக சிவகார்த்திகேயன் ‘நம்ம விட்டு பிள்ளை‘ என்ற நல்ல கதையை கொடுத்தவர் இந்த கதையை எப்படி தேர்ந்து எடுத்தார் என்று தெரியவில்லை… படம் முழுக்க வந்தாலும் மனதில் நிற்கவில்லை இந்த ‘ஹீரோ‘
அவரது ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் அறிமுகம் ஆகி இருக்கிறார். என்ன பிரயோசனம்?. படத்தில் அவருக்கு வேலையே இல்லை.
படத்தில் மறக்க முடியாத ஒருவர் என்றால் அது அர்ஜூன் தான். ஹீரோவுக்கு இணையான கேரக்டர். புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மாஸ்டர் வேடம்.
‘மாஸாக‘ நிற்கிறார்.
வில்லனாக இந்தி நடிகர் அபெய் தியோல். கல்லூரி நடத்தும் இவர் எதற்கு புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கும் மாணவர்களை அழிக்கிறார் என்றே தெரியவில்லை. கல்லூரி நடத்துபவருக்கும் கண்டுபிடிப்புக்கும் என்ன விரோதம்? இடிக்கிறது எல்லா இடத்திலும் இவரே வில்லனாக வந்து நிற்பது எரிச்சல்.
பின்னணி இசையில் இருந்த கம்பீரம் பாடலில் இல்லை. அதிலும் முதல் பாடல் வரும்போது ரசிகர்கள் எழுந்து போய் விடுகிறார்கள். யுவன் சங்கர் ராஜாவுக்கு என்னாச்சு..?.
பாதி படம் ‘‘இருட்டு‘‘க்குள் எடுத்து இருப்பது சோதனை..
கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் பி.எஸ்.மித்ரன்.
சின்ன பசங்க 4 பேரை சேர்த்து வைத்துகொண்டு –ஹீரோ‘‘ வுக்கு முகமூடி அணிவித்து ‘‘சூப்பர் ஹீரோ‘‘வாக மாற்ற முயன்று இருக்கும் கிளைமாக்ஸ் – சின்னபுள்ள தனம். திரைக்கதையில் சறுக்கி இருக்கிறார், மித்ரன்.
படத்தின் சிறப்பு அம்சம் வசனங்கள் தான். பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கிறது .

அருமை சபாஷ் ஹீரோ – டம்மி ஹீரோ
3 thoughts on “விமர்சனம் – ஹீரோ

 1. online casina

  Hi there exceptional website! Does running a blog like this
  take a lot of work? I have absolutely no knowledge of coding however
  I was hoping to start my own blog in the near future.
  Anyhow, if you have any suggestions or tips for new blog owners please share.
  I understand this is off subject nevertheless I simply had to ask.
  Thanks a lot!

  Reply
 2. kiet giang melbourne

  Hi there! I know this is kinda off topic but I’d figured I’d ask.

  Would you be interested in trading links or maybe guest authoring a blog article
  or vice-versa? My site covers a lot of the same topics as yours and I think we
  could greatly benefit from each other. If you happen to be interested feel free to shoot me
  an e-mail. I look forward to hearing from you! Superb blog by the
  way!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *