BREAKING NEWS

கடலூர் மாவட்டத்தில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலை

தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனசாமி பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தொழில் வளர்ச்சிக்காகவும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தனிப்பட்ட குழு ஒன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, அதில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டது. அப்போது, பல்வேறு நிறுவனங்களின் தொழிலதிபர்களும் முதல்வரையும், அமைச்சர்களையும் வெளிநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள்
அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது, லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், டெஸ்லா கார் நிறுவனத்தின் கிளையும் தமிழகத்தில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்ைதயும் நடைபெற்றது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது 8.835 ரூபாய் கோடி முதலீடுகளை பெறுவதற்காக 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம், 35,520 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தொழில் நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.
பெட்ரோ கெமிக்கல் ஆலை
முதல்வரின் அமெரிக்க பயணத்தின்போது ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தினருடன் கொள்கை ரீதியாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தினர் தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் அந்த நிறுவனத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது, கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 50 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது, அதன் பணிகள், செயல்திறன், முதற்கட்ட பணிகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *