BREAKING NEWS

கின்னஸ் சாதனை படம்

கின்னஸ் சாதனைக்காக ஒரு படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் பெயர். ‘ 370 ’ .
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வீதம் மொத்தம் 8 நாட்களில் 48 மணி நேரத்தில் இந்த முழுபடத்தையும் எடுத்து இருக்கிறார்கள்.
இந்த சாதனையை செய்து இருப்பவர், நடிகரும் இயக்குனருமான பாபு கணேஷ்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
இப்படத்தின் கதை நமது நாட்டுபற்றை மையமாக கொண்டது. 48 மணி நேரத்தில் கின்னஸ் சாதனைக்காக இப்படத்தை எடுத்து இருக்கிறேன். தினசரி 6 மணி நேரம் சூட்டிங் நடந்தது. பிறகு ரிகர்சல், லைட்டிங் நடைபெறும்.பிறகு சூட்டிங் தொடரும்.‘‘ என்றார்.
இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகனும், ‘மிஸ்டர் வோல்ட்‘ போட்டியில் 6 வது இடத்தில் இடம் பெற்றவருமான ரிஷி காந்த் நடிக்க கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த அழகி மெகாலி நடித்து இருக்கிறார். மற்றூம் வில்லனாக பெசண்ட் நகர் ரவி நடிக்க கராத்தே கோபால்,ராஜ் கமல், வெற்றி, போகிபாபு,ரோஜா, சிவன் ஸ்ரீனிவாசா, ஆகியோரும் நடிக்க கவுரவ வேடத்தில் பவர் ஸ்டார் சீரினிவாசன் நடித்து இருக்கிறார்.
சாமி ஒளிப்பதிவு செய்ய, சண்டை பயிற்சியை ஜாக்குவார் தங்கம். விஜய் ஆகியோரும், நடனத்தை ரமா தேவியும், அபினய ஸ்ரீயும் கவனிக்க பாபு கணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *