BREAKING NEWS

தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனையருக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மற்ற ஆண்டுகளை விட 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தனித்துவம் கொண்டதாக உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்குபெறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் வெல்லும் உத்திரபிரதேச மாநில வீரர், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது உத்திரபிரதேச ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வெல்வோருக்கு தலா 2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *