BREAKING NEWS

ஹீரோ வேண்டாம் வில்லன் வேடம் கொடுங்கள்’

‘டேக் ஓ.கே கிரியேஷன்ஸ்‘ பட நிறுவனம் தயாரித்துள்ள படம்‘‘ மிரட்சி‘‘. எம். வி கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ளார். ‘‘அது ஏன்?‘‘ என்பது பற்றி அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அவர் கூறியதாவது:-
” இப்படத்துக்காக வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் ஹீரோ வேண்டாம். வில்லன் கேரக்டரே கொடுங்கள் என கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது;‘‘ என்றார்.
. விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு இசை தட்டை வெளீயிட்டார். அவர் பேசுகையில்,‘‘. இப்போது ஆடியன்ஸ் தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. என்றார்
மற்றும் மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் ,இயக்குனர் எம்.வி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ராஜன்,கதாநாயகி ஹீனா ஸஹா ” இசை அமைப்பாளர் ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *