காதலில் நிம்மதியை உணர்கிறேன் – நயன் தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் ஜி தமிழ் தொலைகாட்சி விருது விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவருக்கு ரசிகர்களுக்கு விருப்பமான நடிகை: (விஸ்வாசம், பிகில்) என்ற விருதும்,இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக தேவி விருதும் என 2 விருதுகள் வழங்க்ப்பட்டன. விழாவில் நயன்தாரா பேசுகையில் கூறியதாவது:-
ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
இவ்வாறு நயந்தாரா கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *