BREAKING NEWS

தர்பார் படத்துக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவுகிறார்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினி நடித்த தர்பார் படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது. இதை கொண்டாட இப்போதே ரசிகர்கள் உற்சாகமாகி விட்டார்கள்.
கோவையில் ஒரு தியேட்டர் முன்பு ராட்சத கட் அவுட் வைத்து இருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் ரசிகர்கள் ஒருபடி மேலே போய் தர்பார் படம் திரையிடப்படும், தியேட்டர் மற்றும் கட்-அவுட் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்கள். சேலம் மாவட்டம் பாப்பரபட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் சேலம் மேற்கு மாவட்டம் மெய்யனூரில் உள்ள ஏஆர்ஆர்எஸ் என்ற தியேட்டரில் ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்.
வட்டாட்சியிரின் அறிக்கை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுமா? மறுக்கப்படுமா? என்பது தெரிய வரும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *