BREAKING NEWS

ரஜினியை மிரட்டுவதா? ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சேலத்தில் நடந்த பேரணியில் என்ன நடந்ததோ அதனை தான் ரஜினி கூறியுள்ளார். தி.க.,வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்கள். கொடும்பாவியை எரிப்போம். வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல்தானே. பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.வினர் செய்து வருகின்றனர்.

ரஜினி நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர் ரஜினி.

சேலம் பேரணியில், ராமர் படத்தை நிர்வாணமாக கொண்டு வந்தது உண்மையா இல்லையா? இதே வேறு மதத்தை சேர்ந்த கடவுளை இப்படி செய்திருந்தால் சும்மா விடுவார்களா? பயங்கரவாதம் வெடித்திருக்காதா? ஹிந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்.

ரஜினி பேசியதை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதனால், ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *