தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தமிழக பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்தித்துள்ளனர். பிரதமரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை எம்.பி.க்கள் வழங்கியுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களின் உரிமைகளை திரும்ப தரவேண்டும். மாநிலங்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகின்றது.

அத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு மாநிலத்தின் உரிமையை திருப்பித் தரவேண்டும். தமிழநாட்டில் நீட் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பலமுறை மனுவாக அளிக்கப்பட்டுள்ளது. நேரிலும், நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஊரக மாணவர்கள் நீட் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீட் தெருவிலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கக்கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நதிநீர் பிரச்சனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்னை, தென்னை ஆறு நதிநீர் பிரச்னை போன்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஆறுகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை வெளிவர இருக்கின்ற நிலையில், அதில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பது குறித்து திமுக தரப்பில் இருந்து கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

அந்த விஷயங்களின் கருத்தில் கொண்டு கொள்கையை இறுதி செய்யும் போது அந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடும், மத்திய அரசு பணிகளில் தமிழகத்தில் உள்ளூர் மக்களுக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடும் வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு பணிகளில் இருப்பவர்கள் பணி உயர்வு பெரும் போது அதிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை கைவிட வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ. 7,825 கோடியை தருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை தாமதம் எதுவும் இல்லாமல் விரைவாக கட்டிமுடிக்கப்பட வேண்டும். கடல்நீரை குடிநீராக மாற்றுவதற்கான கூடுதல் திட்டங்கள் தேவை.

சேலத்தில் கெயில் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் ஆலையை தனியார்மயமாக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இலங்கை தமிழ் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *