BREAKING NEWS

திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சி நாங்களே!: சீமான்

2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக நாங்கள் வருவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

டெல்லியில் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி 62 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. எதிர்த்து போட்டியிட்ட பாஜ., 8 இடங்களில் வென்றது; காங்., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டும் எனவும், திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் எனவும் கூறி வந்தார்.

டெல்லியில் நடந்த தேர்தல் நிகழ்வுகளால் சீமான் குஷியாகி உள்ளார். டெல்லியை போல தமிழகத்திலும் மாற்று அரசியலை முன்னெடுத்து செல்ல சீமானுக்கு ஆசை வந்துள்ளது போல. அவர் அளித்த பேட்டியில், 2021ல் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வரும். டில்லியை போல ஒரு அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம், என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *