BREAKING NEWS

கேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா?: கடுப்பான ஸ்டாலின்

சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது புரோக்கர் ஜெயகுமார். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும்.

மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் மக்கள் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால், அதை பிளாஸ் நியூஸ் போடுகின்றனர். பேட்டி கொடுத்துவிட்டு அவர் சூட்டிங் சென்று விடுகிறார். ஆனால், அவரின் பேட்டிக்கு தான் இப்போது முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதை தான் தலைப்பு செய்தியாக போடுகின்றனர் என்றார்.

 

 

 

 

 




One thought on “கேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா?: கடுப்பான ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *