தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

‘‘கன்னி ராசி பெண்ணை மணந்தால் மட்டுமே உன் வாழ்க்கை உச்சிக்கு போகும்’’ என ஜோதிடர் கணித்து கூற ஜோதிடத்தை மட்டுமே நம்பி வாழும் கதாநாயகன் கன்னி ராசி பெண்ணை தேடோ தேடு என தேடுகிறான் அழகழகான பெண் வந்த போதும் கன்னி ராசி பெண்னுக்காக காத்திருந்து காத்திருந்து நொந்து போகிறான். ஒரு நாள் ஒரு பெண்ணிடம் சிக்கி கற்பை இழந்து விட, பிறகு என்ன ஆகிறது என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கும் படம் இது.
கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர், சஞ்சய் பாரதி. நடிகர் சந்தானபாரதியின் மகனான இவர் ஒரு புத்திசாலிசாலி என்பதை ‘யோகிபாபு‘ வைத்து நிருபீத்து இருக்கிறார். யோகிபாபு இருந்தால் படம் ஓடிவிடும் என்பது இப்போதைய நம்பிக்கை. அதற்காக யோகிபாபுவை ஒப்பந்தம் செய்தவருக்கு கதையில் யோகிபாவுக்கு கேரக்டர் இல்லை. அதனால் என்ன? படத்தின் கதையையே அவர் சொல்வதாக அமைத்து படத்தை நகர்த்தி இருப்பது சிறப்பு.
கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண்.‘‘பெண் செட் ஆகி வரும் கடைசி நேரத்தில் ‘‘நீ என்ன ராசி?‘‘ என கேட்கும் அப்பாவிதனத்தை தாராளமாக ரசிக்கலாம். குடி போதையில் கதாநாயகியுடன் படுக்கையை பகிந்து கொண்டு விட்டு பிறகு புலம்பி தவிக்கும் தவிப்பு ‘கல கல‘‘
அவரது மாமாவாக முனிஷ்காந்த். மருமகனின் கதையை ஏற்ற இறக்கங்களுடன் கேட்டு ரசிக்கும் வெள்ளந்தி மனிதர். ‘லூசு‘ தனமான நடவடிக்கையால் சிரிக்க வைக்கிறார்.
ரெபா மோனிகா -டிகாங்கனா என இரண்டு கதாநாயகிகள். ,முதலாமவர் நாயகனை காதலித்துவிட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறார்.. அடுத்தவர் நாயகனுக்கு தன்னை கொடுத்துவிட்டு ‘‘மாஸ்‘‘ கிரகத்துக்கு பயணம் ஆகிவிடுகிறார். நுனி நாக்கு ஆங்கில பேச்சிலும், தெனாவட்டு தனமான நடிப்பிலும் குதிரை மாதிரி திமுறி நிற்கிறார் இந்த டிங்கானா.ஒரே ஒரு சீன் தான் என்றாலும் மயில்சாமி வரும் காட்சி சிரிப்பின் உச்சம்.அதே மாதிரி சார்லி. திருமணமாகி உயிரை விட்டு விட்ட மகளின் பிணத்தை பார்த்து கதறுமிடத்தில் சோகத்தை பிழிந்திருக்கிறார். படத்தின் முதல் பாதி போவதே தெரியவில்லை. அவ்வளவு கலகலப்பு. இடைவேளைக்கு பிறகு வில்லன் இல்லாமல் கதை அரைத்த மாவையே அரைக்கிறது. ‘கல்யாணம் ஆகாமலேயே கன்னி கழிஞ்சிட்டீயே‘‘, ‘‘நீ அனிதாவையும் ஒண்ணும் பண்ணல. சுவேதாவையும் ஒண்ணும் பண்ணல. குட் பாய்டா நீ’‘ என்பது போன்ற ‘ஒரு மாதிரியான‘ வசனங்கள் படம் முழுக்க.திருமணம் ஆகாமலேயே அனுபவித்து விட்ட கதாநாயகி இறுதியில் ‘‘நான் மாஸ் கிரகத்துக்கு போகிறேன்‘‘ என்பது காதில் சுற்றப்பட்ட பூ.
அமைதியான சூழலை காட்ட நாயகியை நடுக்கடலுக்கு அழைத்து செல்லும் காட்சி ரம்யம். ஒளிபதிவாளர் பி.கே. வர்மாவுக்கு ஒரு ஜே.
பின்னனி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கும் ஜிப்ரான் பாடல்களில் கோட்டை விட்டு விட்டார். .
ஆனாலும் எல்லா ராசிகாரர்களுக்கும் பிடிக்கும் படம்.
3 thoughts on “தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

 1. Anonymous

  I think that is one of the such a lot vital info for
  me. And i am glad studying your article. However wanna observation on some normal things, The website taste
  is perfect, the articles is actually nice : D. Good activity, cheers

  Reply
 2. Anonymous

  Excellent pieces. Keep writing such kind of info on your blog.
  Im really impressed by it.
  Hello there, You’ve done a great job. I will certainly digg
  it and in my view recommend to my friends. I’m confident they’ll be benefited from
  this site.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *