BREAKING NEWS

தனுஷின் ‘பட்டாஸ்’ படம் நஷ்டமா…?

தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘‘பட்டாஸ்‘‘ தனுசின் . அசுரன் படம் வெற்றியடைந்த காரணத்தால் இந்தப் படத்தை மிகவும் நம்பி வாங்கியுள்ளனர் வினியோகஸ்தர்கள். தமிழ்நாடு வியாபாரமாக சுமார் 16 கோடி வரை நடந்துள்ளது.
ஆனால் படம் எதிர்பார்த்த வசூல் இல்லை. சுமார் ரூ.6 முதல் 8 கோடி வரை நஷ்டம் வரும் என தவகல் பரவியது. மேலும் இந்த நஷ்ட தொகையை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.
“பட்டாஸ் படம் 5 நாட்களிலேயே ரூ.23.5 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது. ரூ.12.5 கோடி ஷேர் கிடைத்துள்ளது. 5 நாட்களிலேயே 70 சதவீதம் போட்ட முதல் எடுக்கப்பட்டுவிட்டது. மீதம் அடுத்தடுத்த நாட்களில் எடுக்கப்பட்டுவிட்டது. 8 கோடி நஷ்டம் என்பது ஆதாரமற்ற தகவல் ‘‘ என படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *