BREAKING NEWS

யோகிபாவுக்கு தனுஷ் தங்க சங்கிலி பரிசு

முன்னணி நகைசுவை நடிகரான யோகிபாபு சமீபத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டார். மணமகள் பெயர் மஞ்சு பார்கவி. இந்த திடீர் திருமணம் யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் ரகசியமாக நடந்தது. திருமணத்துக்கு யோகிபாபு யாரையுமே அழைக்கவில்லை.
திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து யோகிபாபு தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்..மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் யோகிபாபுவுக்கு படகுழுவினர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். யோகிபாபுவை திருமண கேக் வெட்ட வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் யோகிபாபுவுக்கு திருமண பரிசாக தனுஷ் தங்க சங்கிலி பரிசு வழங்கினார். இதை யோகி பாபு கழுத்தில் தனுஷ் அணிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *