மாமனாருடன் மோதும் மருமகன்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘‘தர்பார்’’படம் வருகிற பொங்கலுக்கு வெளிவருகிறது. ஆனால் எந்த தேதியில் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.ரஜினி படம் வெளிவருவதால் பொங்கலுக்கு வேறு படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினி படத்துடன் மோதுகிறார், அவரது மருமகனான தனுஷ்.
தனுஷ் இப்போது ‘‘பட்டாசு‘‘ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கி இருக்க நவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது.
இப்போது இப்படம் வருகிற பொங்கலுக்கு வருகிறது என்றும் படம் 16-ந் தேதி வெளியாகும் என்றும் சத்யஜோதி பிலிஸ் அதிபர் தியாக ராஜன் தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி . 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ,அஜித் குமார் நடிப்பில் வந்த “விசுவாசம்” படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே வருகிற 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று அடுத்த பிரம்மாண்டமான படைப்பான “பட்டாசு” திரைப்படத்தை திரையிட இருக்கிறோம்.‘‘ என அறிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *