ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!

டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘சபாக்’.
இப்படத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். அது மட்டுமல்ல .மேக்னா குல்சார் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோனே தயாரித்துள்ளார்.
படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் மாஷி நடிக்க ‘ராஸி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் .
படத்தின் கதை வருமாறு:-
தீபிகா படுகோனே 2005 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தெருவில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார் . இவர் மீது ஆசிட் வீசியவர் இவரை ஒரு தலையாக காதலித்தவர். அவரது வயதோ தீபீகா படுகோனேயை விட இரு மடங்கு அதிகம்.
ஆச்சிட் வீச்சால் முகம் முழுக்க பாதிக்கப்பட்ட தீபிகா படுகோனே வீட்டுக்குளேயே முடங்கி போகிறார். பிறகு தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என எண்ணி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் . என்பது கதை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *