BREAKING NEWS

‘தற்கொலை மிரட்டல் விடுத்தார்’ நடிகை சனம் ஷெட்டிக்கு தர்ஷன் பதிலடி

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய கதாநாயகியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங்கும் செய்து வருகிறார். ‘கதம் கதம்‘, ‘சதுரம் 2’ உள்பட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்து எதிர்வினையாற்று படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது நடித்தவர் தர்ஷன். ‘பிக்பாஸ்’ சீசன் 3ல் பங்கேற்றதால் பிரபலம் ஆனார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாருக்கு நேற்று தர்ஷன் நிருபர்களிடம் பதில் அளித்தார். அபோது அவர் கூறியதாவது:-
நானும் சனம் ஷெட்டியும் காதலித்தது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான்.
ஒரு விளம்பரத்தை பார்த்து விஜய் டிவியில் என்னை ‘‘பிக் பாஸ்‘‘ நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். அவர்கள் அழைத்த அன்று தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. என் வீட்டுக்கு தெரியாமல் தான் நிச்சய தார்த்தம் நடந்தது. படவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பின் என் தங்கையிடம் பேசி என் சமூகவலைத்தள கணக்கு பாஸ்வேர்டுகளை வாங்கிக் கொண்டார். அந்த பதிவுகள் மூலமாகத்தான் எங்கள் காதல் வெளியில் தெரிய வந்தது.
பிக்பாஸ் முடித்து வந்தபின் அவருக்கு என் மீது பொறாமை அதிகமானது. பிற பெண்களுடன் பேசக்கூடாது என்று பிரச்சினை செய்தார். முக்கியமாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்னுடன் போட்டியாளர்களாக இருந்த பெண்களுடன் நான் பேசக்கூடாது என்று சந்தேகப்பட்டார்.
ஒரு கட்டத்தில் அவருடன் வாழமுடியாது என்று தெரிந்ததால் பிரிந்து விடலாம் என்று சொன்னேன்.ஆனால் ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதன்பிறகு தான் எங்களுக்குள் சண்டை பெரிதானது. என்னை வைத்து படமெடுக்க திட்டமிட்ட தயாரிப்பாளர்களிடம் சென்று எனக்கு வந்த வாய்ப்புகளை தடுக்க முயற்சித்தார். அவர் ரூ. 15 லட்சம் எனக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *