BREAKING NEWS

தர்பார்’ தணிக்கை எப்போது?

ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் நடித்துள்ள ‛தர்பார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ஜனவரி 9ந் தேதியே வெளியிட இருக்கிறார்கள்.வெளிநாடுகளில் 8ந் தேதியே வெளியாகிறது.
படத்தை நாளைக்குள் (31ந் தேதி) தணிக்கை செய்து சான்றிதழ் வாங்கினால் தான் இந்த ஆண்டு படமாக தர்பார் இருக்கும். இல்லாவிட்டால் 2020ம் ஆண்டுக்கான படமாகி விடும். அதுமட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு 3 நாட்கள் முன்னதாக படத்தின் பிரிண்டுகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். காரணம் அந்தந்த நாடுகளின் தணிக்கைக்கு கால அவகாசம் வேண்டும்.
இதனால் இன்று அல்லது நாளைக்குள் தணிக்கை சான்றிதழ் வாங்கியே தீர வேண்டும் என்கிற புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *